Archive for October, 2019

தீபாவளி இந்தியா முழுக்க வெவ்வேறு காரணங்கள், முன் கதைகள் சொல்லப்பட்டு பல்வேறு விதங்களில் கொண்டாடப்படுகிறது.

வட இந்தியாவில், ராமன் இராவணனைக் கொன்று விட்டு அயோத்தி திரும்பிய நாள் என்கிறார்கள்.

ஜைனர்கள் மகாவீரர் நிர்வானம் அடைந்த நாள் என்று சொல்லி கொண்டாடுகிறார்கள்

பௌத்த மதத்தினரின் ஒரு பிரிவினரும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.

மொத்தத்தில் பெரும்பான்மை வடநாட்டவர் லட்சுமி பூஜை ன்னு தான் கொண்டாடுகிறார்கள். ஐந்து நாட்கள் பண்டிகையாக இருக்கிறது.

இப்போது தமிழ்நாட்டுக்கு வந்தோம்னா கிருஷ்ணன் நரக அசுரனை கொன்ற நாள் தீபாவளி என்று சொல்கிறார்கள்.

சரி. இதுவரை பார்த்தெல்லாம் விக்கிப்பீடியா இருக்கது தான். இதான் கள எதார்த்தமும் கூட.

இதுக்க மேல இந்த தகவல்கள், நமக்கு (எனக்கு) சொல்லப்பட்ட கதைகள், தாம் தீபாவளி கொண்டாடும் விதம் இதெல்லாம் வச்சு யோசிச்சு பார்த்தாலே சில குழப்பங்கள், சில சிந்தனைகள் வரும்.

1. அதாவது வடக்குல லட்சுமிய கும்பிடுராங்க.
நாம பொதுவா வீட்டுல இருக்க சாமிய தான் கும்பிடுரோம். லட்சுமியும் இல்ல. நமக்கு சொன்னக் கதைக்கு ஏத்தமாதிரி கிருஷ்ணனையும் special ah கும்பிடுவது இல்லை.

2. இங்க மட்டும் தான் தீபாவளிக்கு எண்ணெய் தேச்சு குளிக்கும் பழக்கம் இருக்குது.

3. இங்க மட்டும் தான் கறிவிருந்து படையல் போட்டு சாமி கும்பிடுரோம். வடக்குல சைவம் தான்.

4. வடக்குல 5 நாள். இங்க ஒரு நாள் மட்டும் தான்.

மொத்தத்தில் நாம தீபாவளி ன்னு சொல்லிட்டு பண்றது கிட்டதட்ட ‘உறவினர்’ இறந்தப்பின் செய்யும் சடங்குகளாக தான் இருக்கு.

இதை ஏன் இப்ப சொல்றேன் னா, எந்த ஒரு சமூகத்துக்கும் பண்டிகைகள் தேவைப்படுது ஒரு பிரேக் க்கு. நாயக்கர் காலத்தில் தொடங்கியதாக சொல்லப்படும் இந்த தீபாவளி இன்னிக்கு எல்லா தமிழ் இந்துக்களுக்குள்ளும் வேரூன்றி விட்டது. இதைக் கொண்டாட வேணாம் ன்னு சொல்லி மக்கள மாத்திரது நடக்கும் காரியமில்லை.

அதனால் நாம் ஏற்கனவே தீபாவளி கொண்டாடும் முறையை துணையாகக் கொண்டு நரக அசுரனை கொண்டாடும் தினமாகவே கதையை அடுத்த தலைமுறைக்கு கடத்தலாம்.

மலையாளிகள் மகாபலி என்னும் அசுரனை வரவேற்று கொண்டாடும் ஓணத்தைப் போல நாமும் தீபாவளி கொண்டாடலாம். நமக்கான கதையை நாமே மாற்றி எழுதலாம்.

இது கிருஷ்ணக் புராணக்கதைய நம்புறியா போன்ற விவாதத்துக்கு போக தேவையில்லை. அவற்றை நம்பும் மக்களுக்கு இந்த கதையை, இந்த ஆரிய அரசியலை கொண்டு சேர்க்கலாம். அதற்கு அடுத்த தலைமுறை சிந்திக்கும்.

மொத்தத்தில் வேறு வழியின்றி தீபாவளி கொண்டாடுபவர்கள், கிருஷ்ணன்களை, லட்சிமிகளை விலக்கிவிட்டு

அசுரனைப் போற்றலாம் 🔥

PS: Many would have told the same as this is where the natural thinking and our social Conditioning lead us to